அடிக்கடி வீட்டில் சண்டை.. கோபத்தில் சகல வசதிகளுடன் ரகசிய வீட்டு குகையை உருவாக்கிய இளைஞர்
பெற்றோர்களுடன் அடிக்கடி சண்டை போட்ட இளைஞர் ஒருவர் தனியாக குகை ஒன்றை உருவாக்கி குடியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் இளைஞர் சிறுவயது முதலே பெற்றோரிடம் அடிக்கடி சண்டையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இது எல்லா குடும்பங்களில் நடைபெறும் சாதாரமாண விஷயம் தான்.
ஆனால் இதற்கு அந்த சிறுவன் செய்த செயல் தான் அவரின் பெற்றோரையே வியக்க வைத்துள்ளது. அந்த இளைஞர் தங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒரு குகையையே உருவாக்கியுள்ளார்.

மேலும், இதுகுறித்து கூறும் அவர், 'சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் என் பெற்றோர்கள் ட்ராக் சூட் அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது எனக் கூறினர்.
அப்போது எங்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பெற்றோருடன் சண்டை போடும் நேரங்களில் ஒளிந்து கொள்வதற்காக வீட்டிற்கு பின்னால் 3 மீட்டர் ஆழத்தில் குகை ஒன்றை தோண்டினேன்.

மேலும், சுமார் 6 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிய என்னுடைய குகை தற்போது கழிவறை, வைஃபை மற்றும் ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளையும் உருவாக்கியுள்ளேன் என அந்த இளைஞர் கூறிய தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.