இந்த நகரில் இறப்பது சட்டவிரோதம்- உலகையே திரும்பி பார்க்க வைத்த சட்டம்
ஸ்பெயின் நாட்டின் கிரனாடா மாகாணத்தில் அமைந்துள்ள லான்ஜரோன் (Lanjaron) என்ற சிறிய நகரத்தில், உலகையே ஆச்சரியப்பட வைத்த ஒரு விசித்திரமான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இறப்பதற்கு தடை விதித்த நாடு
1999-ல், அந்நகரின் கல்லறை முழுமையாக நிரம்பியது. புதிய கல்லறைக்கான நிலம் இல்லாததால், அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோ, ஒரு நகைச்சுவைத் தீர்வாக இந்தத் தடைச்சட்டத்தை அறிவித்தார்.
ஆனால், 26 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றுவரை அந்த நகரில் ஒரே ஒரு கல்லறையே உள்ளது. புதிய கல்லறைகள் இல்லாத காரணத்தால், இந்த "இறக்க தடை" சட்டம் தற்காலிகமாக நடைமுறையில் தொடர்கிறது.
நார்வேயின் லாங்யர்பியென் (Longyearbyen) என்ற இடத்தில், 1950-ல் இந்த மாதிரி இறப்பதற்கான தடை விதிக்கப்பட்டது. அங்கு உள்ள அர்க்டிக் காலநிலை காரணமாக உடல்கள் சிதைவடையவில்லை.
ஒரு உடலில் 1917 இன்ஃப்ளூயன்சா வைரஸ் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் நோய் பரவும் அபாயம் காரணமாக புதிய உடல்களை புதைப்பது தடை செய்யப்பட்டது.
லான்ஜரோன் நகரம்
"அல்புஜர்ராக்களின் நுழைவாயில்" என அழைக்கப்படும் லான்ஜரோன் சியரா நெவாடா மலை அடிவாரத்தில், கிரனாடாவிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது.
சுமார் 4,000 பேர் வசிக்கின்றனர். கனிம நீரூற்றுகள், ஸ்பாக்கள், உணவுப் பாரம்பரியம், விவசாயம், சுற்றுலா ஆகியவை நகரின் அடையாளம்.
இங்கு ஒவ்வொரு ஆண்டு ஜூன் 24-இல் நடைபெறும் விழாவில், மக்கள் ஒருவர்மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி, நகரின் நீரூற்று பாரம்பரியத்தை கொண்டாடுகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |