தென்னிந்தியாவில் நீங்கள் சுற்றிப்பார்க்க மறந்த ரம்மியமான இடங்கள் இதோ!!
இந்தியாவிலேயே தென்னிந்தியாவில் தான் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் இருக்கின்றன.
அந்த வகையில், மிகப் பெரிய மலைகள், பள்ளத்தாக்குகள், மாநகரங்கள், கடற்கரைகள் உள்ளிட்டவை இங்கு அதிகமாக இருக்கின்றன.
அத்துடன் தமிழகத்தின் ஊட்டி முதல் கர்நாடகத்தின் ஹம்பி கூர்க் வரை ஏராளமான அழகிய இடங்களை பார்க்கலாம்.
இதன்படி, தென்னிந்தியாவில் நாம் பார்க்க மறந்த சில இடங்களை பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் மறக்க முடியாத இடங்கள்
1. வயநாடு, கேரளா
இந்தியாவில் இயற்கை நிறைந்த இடங்களில் ஒன்று தான் கேரளா. இங்கு பசுமைக்கு அளவே இருக்காது. இயற்கையுடன் நீங்கள் அதிக நேரத்தை செலவிட விரும்பினால் இது உங்களுக்கு வசதியான இடமாக இருக்கும். அத்துடன் படகு சவாரியும் இங்கு பிரபல்யமடைந்து காணப்படுகின்றது.
2. விசாகப்பட்டினம், ஆந்திரா
விசாகப்பட்டினம் தான் ஆந்திர மாநிலத்தில் உள்ள மிக அழகிய கடற்கரை நகரமாக பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தியாவில் உள்ள மிகப் பழமையான கப்பல் துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகும். கடற்கரை அழகாக இருப்பதுடன் சுத்தமாகவும் இருக்கின்றது. ஆகையால் குழந்தைகளுடன் வருகை தரலாம்.
3. புதுச்சேரி
பிரெஞ்சு கலாச்சாரத்தை ஸ்ரீஇந்தியாவில் இருந்தபடி பார்க்கலாம். அதாவது கடற்கரை ஓரமாக உள்ள ஆசிரமங்கள், யோகா மையங்கள், பிரெஞ்சு மாடல் கடைகள், வீடுகள் உள்ளிட்டவை காணப்படுகின்றது.
4. மூணார், கேரளா
கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மிக அழகிய இடங்களில் இதுவும் ஒன்றாக காணப்படுகின்றது. சுமார் 60 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. அத்துடன் புத்துணர்ச்சி முகாமாக பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இதை பயன்படுத்திக் கொண்டதாக கதைகளும் இருக்கின்றது.
5. கொடைக்கானல், தமிழ்நாடு
தென்னிந்தியாவில் மக்கட் தொகை நிறைந்த இடமாக தமிழ்நாடு இருக்கின்றது. இங்கு காணப்படும் கொடைக்கானல் பகுதி வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகளை கொடைக்கானல் உங்களுக்கு வழங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |