முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த சௌந்தர்யா! தாத்தா ரஜினியின் கியூட் ரியாக்ஷன்
ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா நேற்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், இன்று தனது குழந்தை மற்றும் அப்பாவுடன் புகைப்படம் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
சவுந்தர்யாவின் பிறந்தநாள்
கோலிவுட் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் ரஜினிகாந்த், இன்றும் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகின்றார்.
ரஜினிகாந்த் போலவே இவருடைய இரு மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும், சினிமாவில் இயக்குனராக பணியாற்றி உள்ளனர்.
இதில் ஐஸ்வர்யா சமீபத்தில் தன்னுடைய காதல் கணவர் தனுஷை விவாகரத்து செய்தார். சவுந்தர்யாவும் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக விசாகன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து இரண்டாவது முடியாக கர்ப்பமான இவருக்கு செப்டம்பர் 11 ஆம் தேதி அழகிய ஆண் குணத்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு வீர் என பெயர் வைத்துளளதாக கூறி இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் வெளியிட பலரும் சவுந்தர்யா - விசாகன் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யா
இந்நிலையில் நேற்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடிய சவுந்தர்யா, தன்னுடைய மகன் வீர் மற்றும் அப்பாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் நேற்று எனது பிறந்தநாளுக்கு நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.. . கடவுள்கள் இந்த ஆண்டு எனக்கு சிறந்த பரிசை அளித்துள்ளனர், அது என் வீர் பாப்பா. இந்த அற்புதமான குழந்தைக்கு பின்னர் என் தந்தை இருப்பது வாழ்க்கை ஒரு உண்மையான ஆசீர்வாதம் என தெரிவித்துள்ளார்.