கடைசி பந்தில் தோனி அடித்த ரன்! துள்ளிக் குதித்த பிரபல நடிகர்.. தீயாய் பரவும் காட்சி
ஐபிஎல் ஆட்டத்தில் தோனியின் விளையாட்டை அவதானித்த நடிகர் சூரி துள்ளிக் குதித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐபிஎல் போட்டி
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதி கொண்டது.
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. இதையடுத்து 156 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது.
ஆரம்பம் முதலே ரன் அடிக்க முடியாமல் திணறி வந்த சென்னை அணி விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. கடைசி கட்டத்தில் பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்க சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.
படப்பிடிப்பில் வழுக்கி விழுந்த ரக்சிதா! காணொளியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடைசி ஓவரில் நிகழ்ந்த மாற்றம்
முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன் எடுத்த நிலையில், எஞ்சியுள்ள 4 பந்துகளையும் எதிர்கொண்ட தோனி 6, 4, 2, 4 என அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி சென்னை அணியை தோனி வெற்றியடைய செய்தார்.
1 பந்துக்கு 4 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் கூலாக பவுண்டரி அடித்து தோனியின் புகழ் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இதை பார்த்து மெர்சலான நடிகர் சூரி, டிவி முன்பு துள்ளிக்குதித்து சென்னை அணியின் வெற்றியை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thala thalathan #msd #MSDhoni #csk #yellove #ipl2022 #BCCI #ipl pic.twitter.com/8eST2IYdwM
— Actor Soori (@sooriofficial) April 21, 2022