செல்வராகவன் வீட்டில் சோனியா அகர்வாலுக்கு நடந்த கொடுமை... விவாகரத்துக்கு காரணம் இதோ
நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவனை விவாகரத்து செய்த காரணத்தை முதன்முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
சோனியா அகர்வால்
நடிகை சோனியா அகர்வால் கடந்த 2022ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். பின்பு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்தின் போதி சோனியா அகர்வால், செல்வராகவன் இடையே இருந்த நட்பு காதலாக மாறியது. இடையில் பல படங்களில் நடித்து வந்த சோனியா கிசுகிசுவில் சிக்கினார்.
பின்பு செல்வராகவனை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்டு சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காணப்பட்டு கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
சோனியா அகர்வாலை விவாகரத்து பெற்ற சில வருடங்களில் தன்னுடன் துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்ததுடன், இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
சோனியா அகர்வால் தற்போது வரை தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர்களின் விவாகரத்துக்கு காரணம் சோனியா அகர்வாலின் குடிப்பழக்கம் என்று செல்வராகவனால் கூறப்பட்டது.
அப்பொழுது எந்தவொரு பதிலளிக்காமல் இருந்த சோனியா அகர்வால் 10 ஆண்டுக்கு பின்பு தற்போது தனது விவாகரத்துக்காக காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு பின்னர் சோனியா அகர்வாலை செல்வராகவனின் ஒட்டுமொத்த குடும்பமும் நடிக்க கூடாது என எதிர்த்ததாகவும், எனவே ஒரு வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்த சோனியா அகர்வால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நடிகை குஷ்பு மூலம் சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், மன உளைச்சலில் இருந்து மீள்வதற்காக குடும்பத்தினரின் எதிர்ப்புகளை மீறி அந்த சீரியலில் நடித்ததால், விவாகரத்து செய்ய சொல்லி தன்னை செல்வராகவனின் குடும்பத்தினர் டார்ச்சர் செய்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் சோனியா அகர்வால்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |