பெற்ற மகனை கருணை கொலை செய்ய கோரிய தாய்.. இறுதியில் நடந்த விபரீதம்
பெற்ற மகனை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு நீதிமன்றம் வந்த தாய், திரும்பி செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜிபள்ளி கிராமத்தை சேர்ந்த மணி, அருணா தம்பதியரின் மகன் ஹர்ஷ்வர்தன்(10).
அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் மேல்மாடியில் விளையாடிய போது தவறி கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது.
பின்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் உடல்நிலை சரியாகி பள்ளிக்கு சென்று வந்துள்ளான். ஆனால் திடீரென அவரது கண், வாய், மூக்கு, ஆசனவாய் இவற்றின் வழியாக ரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளது.
பின்பு தனியார் மருத்துவமனை உட்பட பல மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். ஆனாலும் சிறுவனின் உடல்நிலை சரியாகவில்லை.
இந்நிலையில், சிறுவனின் தந்தை மணி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் எங்கேயோ சென்றுவிட்டார். இதனால் குழந்தையை வைத்துக்கொண்டு திகைத்து நின்ற அருணா, இனிமேல் ஒன்றும் செய்யமுடியாத நிலையில், மகனை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நீதிமன்றத்துக்கு விடுமுறை ஆகையால், மகனை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பி சென்ற போது, எதிர்பாராத விதமாக சிறுவன் ஹர்ஷ்வர்தன் பரிதாபமாக உயிழந்துள்ளான்.
ஹர்ஷவர்தன் மரணம், அவனுடைய தாயின் பரிதாபநிலை ஆகியவை அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
