PSBB பள்ளியின் அலட்சியத்தால் உயிரிழந்த பிரபல இயக்குனரின் மகன்! 9 வருடத்திற்கு முன் நடந்த பகீர் சம்பவம்..!
பிரபல தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் பற்றிய தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் கொளுந்து விட்டு எரிந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த பள்ளியில் நடந்த மற்றொரு மரண சம்பவம் குறித்த தகவல் 9 வருடத்திற்கு பின் மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தமிழில் 'மாசிலாமணி, 'வேலூர் மாவட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மனோகர்.
இவருடைய மகன் ரஞ்சன் PSBB பள்ளியில் தான் படித்து வந்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ரஞ்சன் பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்ட போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நீச்சல் பயிற்சியாளர் கவனக்குறைவு காரணமாகவே ரஞ்சன் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்பட்டது.
பின்னர் அந்த நீச்சல் பயிற்சியாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.