தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்: பின்னணியில் பகீர் காரணம்
குடிபோதையில் பெற்ற மகனே தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே உள்ள வீசாணம் அன்னை சத்யா நபர் பகுதியை சேர்ந்தவர் வையாபுரி(60). இவருக்கு நல்லம்மாள் (55) என்ற மனைவியும், வெங்கடேஷ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமும் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் நேற்று வையாபுரி தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட கிடந்ததையடுத்து, பொலிசார் மோப்ப நாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மோப்ப நாய் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை, அதேநேரம் வீட்டின் அருகே இரத்த கரையுடன் அருவாள் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இதனால் வையாபுரியின் மகன் வெங்கடேஷ் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்து விசாரணை மேற்கொண்ட போது, தந்தையை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது மனைவி தன்னை விட்டு பிரிந்துசென்ற வெங்கடேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
தான் மது குடித்துவிட்டு வருவதை தந்தை கண்டித்ததால் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்ததாக வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.