தந்தையையும், தாயையும் கொலை செய்தால் 5 லட்சம்! இறுதியில் நடந்த டுவிஸ்ட்
இந்திய மாநிலமான ஆந்திராவில் தாய், தந்தையை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மகன் இறுதியாக எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டுள்ளான்.
சொத்தால் ஏற்பட்ட ஆசை
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தன்னிடம் உள்ள சொத்து முழுவதையும் கடந்த 2014ம் ஆண்டு இரண்டு மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.
இதில் மூத்த மகனுக்கு பிரிந்து கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதால், அண்ணனின் சொத்துக்கு தம்பி லட்சுமி நாராயணா ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால் இதனைக் கைப்பற்ற தனது தாய் மற்றும் தந்தை இருவரும் இடையூறாக இருந்ததால் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
பெற்றோரை கொலை செய்ய ஐந்து லட்சம்
இந்நிலையில் தனக்கு தெரிந்த ஷேக் சபியுல்லா என்பவரிடம் தந்தையை கொலை செய்தால் 3 லட்சம் என்றும் தாயையும் கொலை செய்தால் ஐந்து லட்சம் என்றும் பேரம் பேசியுள்ளார்.
இதற்கு அட்வான்ஸாக ரூபாய் 30 ஆயித்தையும் கொடுத்துள்ளார். பணத்தினை பெற்றுக் கொண்ட ஷேக் சிறையில் இருந்த தனது நண்பர்களான ஷேக் கவுல் பாஷா, ஷேக் சாகுல் ஆகியோருடன் பேசி திட்டம் தீட்டியதோடு, இரண்டு முறை ஒத்திகை பார்த்துள்ளார்.
இந்நிலையில் திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாக கூறி கவுல் பாஷா, சாகுல் இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திருடி வைத்திருந்த நகையை கைப்பற்றியதோடு, பொலிசாரின் தீவிர விசாரணையில் இந்த கொலை பிளானையும் உளறியுள்ளனர். பின்பு இதற்கு காரணமாக இருந்த லட்சுமி நாராயணா, ஷேக் சபியுல்லாவையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.