கத்திக்குத்தை உண்டாகிய கறிகுழம்பு! மகனால் தந்தைக்கு நேர்ந்த சோகம்
கறிக்குழம்பு காலியானதால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்திக்குத்தை ஏற்படுத்திய கறிகுழம்பு
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் காவல் சரகம் மேலவிசலூர் கிராமம் காந்திநகரில் வசிப்பவர் மோகன்தாஸ்(60). இவரது மகன் இராமச்சந்திரன்(20). இவருக்கு திருமணமாகிய நிலையில் தனக்கு தனியாக வீடு வேண்டும் என்று தந்தையுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் நேற்று கறி குழம்பு வைத்திருந்ததால், தந்தை மோகன்தாஸ் அதனை மகனுக்கு இல்லாமல் விரும்பி சாப்பிட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே தந்தையின் மீது கோபத்தில் இருந்த மகன், கறி குழம்பால் மீண்டும் கோபமாகி, தந்தையை குத்தியால் முதுகில் குத்தியுள்ளார்.
தற்போது ராமச்சந்திரன் தப்பியோடிய நிலையில், மோகன்தாஸ் உடம்பில் இருக்கும் கத்தியை அறுவை சிகிச்சை செய்தே எடுக்க முடியும் என்று கூறி மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு தஞ்சை மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ள மகனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.