எனக்கு பொண்ணு இருக்கா- மேடையில் கண்ணீருடன் பகிர்ந்த உண்மை! விஷாலின் மறுப்பக்கம்
“நா ஒரு பேச்சுலர் தான் ஆனால் எனக்கு ஒரு பொண்ணு இருக்கா” என நடிகர் விஷால் மேடையில் கூறிய உண்மை ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால்.
இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வந்தாலும் பூஜை போன்ற திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் விரும்பி பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஷாலுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சியம் செய்யப்பட்ட நிலையில் சில பிரச்சினைகளால் அந்த திருமணம் நின்று விட்டது.
இதன் பின்னர் சினிமா படங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வரும் விஷால் சில சமூகப்பணிகளையும் செய்து வருகிறார்.
அந்த வகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த சிறுமி ஒருவரை இந்தியாவிலிருக்கும் பிரபல கல்லூரிகளில் ஒன்றான Stella Maris கல்லூரியில் ஆங்கில மொழியில் படிக்க வைக்கிறார்.
பொண்ணின் ஆசையை நிறைவேற்றிய விஷால்
இதனை திரைப்பட வெளியிட்டு விழாவில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
அந்த சிறுமி தான் என்னுடைய பொண்ணு எனவும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.
இது குறித்து சிறுமி கூறிய போது, “ நான் சாதிக்க வேண்டும் என நினைத்த கனவுகளை விஷால் அண்ணா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இதற்கான எல்லா வசதிகளையும் விஷால் அண்ணா செய்து வருகிறார். எல்லாவற்றிற்கும் நன்றி..” என கண்ணீருடன் பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. காணொளியை பார்த்த விஷால் ரசிகர்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தும் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |