வீடுகளில் பல்லி தொல்லையா? செலவே இல்லாமல் ஓட ஓட விரட்டலாம்
பொதுவாக வீடுகளில் கரப்பான் பூச்சி, எறும்பு, தவளை, பல்லி உள்ளிட்ட ஊர்வனங்கள் வருவது வழமை தான். இதற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்களை பயம் கொள்வார்கள்.
சிலருக்கு இது போன்ற ஊர்வனங்களை கண்டால் அச்சமாக இருக்கும்.
பல்லி சுவரில் இருந்து அல்லது மூலைகளிலிருந்து நம்மீது விழுந்தால் அறுவருப்பாக இருக்கும்.
அந்தவகையில் பல்லியை வீட்டிலிருந்து துரத்துவதற்கு சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன இது குறித்து தெரிந்து கொள்வோம்.
முட்டை ஓடு
பொதுவாக பல்லிகளுக்கு முட்டையின் வாசனை பிடிக்காது. இதனால் முட்டையோடு இருக்கின்றது இடத்திற்கே பல்லி வராது. பல்லி வரும் இடத்தை சரியாக பார்த்து வைத்து கொண்டு அந்த இடங்களில் முட்டையோடு வைக்கலாம்.
பூண்டு
நம்மை போல் பல்லிக்கும் பூண்டு வாசனை பிடிக்காதாம். பூண்டை அப்படியே வைத்தால் வாசனை பெரியதாக வெளியில் வராது. இதனால் பூண்டின் சாற்றை எடுத்து அதனை தெளித்தால் பல்லியின் வருகை குறையும். அடிக்கடி பயன்படுத்தாதீர்கள் ஏனெனின் வீட்டில் வாசனை மூக்கை துளைக்கும்.
காபி தூள்
காபி தூளையும் புகையிலையும் ஒன்றாக கலந்து கதவு மற்றும் யன்னல்களின் பக்கத்தில் உருண்டையாக வைக்கவும். இதனால் பல்லி வீட்டு பக்கம் கூட வராது.
மயிலிறகு
பல்லிகளுக்கு மயிலிறகு என்றால் அப்படியொரு பயமாம். இதனால் பல்லி வராவே கூடாது என நினைப்பவர்களில் இதனை அந்த இடத்தில் குற்றி வைக்கலாம்.