சமையல் குறிப்புகள் - மாமியாரை மயக்கும் ரகசிய குறிப்பை தெரிஞ்சுக்கோங்க
சமையல் சமாளிப்புகள் என்பது சமையல் திறனை மேம்படுத்தவும், சமையலறையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் உதவும் குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் ஆகும்.
ஆனால் இந்த குறிப்புகள் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அப்படி தெரியாத நபர்கள் சில குறிப்பை தெரிந்து சமைப்பதன் மூலம் சமையலில் கெட்டிகாரர்களாக இருக்க முடியும். அந்த குறிப்புகளை பார்க்கலாம்.
சமையல் ரகசிய குறிப்புகள்
சாதம் குழைவதாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துவிட்டால் குழையாது.
தயிர் பச்சடி செய்யும்போது, அதில் பூண்டுப் பற்கள் இரண்டை நசுக்கிப் போட்டால் பச்சடி சுவையாக இருக்கும்.
ரசத்துக்கு கொத்தமல்லி இல்லையென்றால், தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து, போட்டால் வாசனையாக இருக்கும்.
சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது, அதனுடன் வெந்தயம் சேர்த்து வேகவைத்தால் நல்ல வாசனையாக இருக்கும்.
மழைநீரில் சாதம் செய்தால், சாதம் வெண்மையாக இருக்கும். பருப்பு வேகமாக வெந்துவிடும். சுவையாக நன்றாக இருக்கும்.
வெள்ளரிக்காயை நறுக்கி பஜ்ஜி போட்டால், அதன் சுவையே தனி.
முட்டைகோஸ் கூட ஒரு சின்ன துண்டு இஞ்சியை சேர்த்து சமைத்தால் அதன் மனம் மாறாம அப்படியே இருக்கும்.
காலிஃப்ளவர் சமைக்கும்போது பால் ஒரு சொட்டு சேர்த்தால் அதன் வெள்ளை நிறம் மாறாது.
இட்லி மாவு புளிக்காம இருக்க வெற்றிலை காம்பை மாவில் போட்டு வைக்க வேண்டும்.
பெருங்காயம் கட்டியாகாமல் இருக்க அதனுடன் இரண்டு பச்ச மிளகாய் சேர்த்து வைக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |