உடல் எடை குறைப்பின் போது நாம் விடும் சில தவறுகள்! இதை மட்டும் தொடாதீங்க
பொதுவாக தற்காலத்திலுள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் உடல் எடை குறைப்பு அல்லது அதிகரிப்பு ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.
சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கும் அதனை குறைக்க வேண்டிய தேவை இருக்கும் அல்லது உடல் எடை குறைவாக இருக்கும் அதிகரிப்பதற்கு பல டிப்ஸ்கள் மற்றும் உணவு முறைகளை பின் தொடர்வார்கள்.
ஆனால் இது போன்று பின் தொடரும் போது அது சில வேளைகளில் சிலருக்கு வெற்றியளிக்கும், சிலருக்கு வெற்றியளிக்காது. இவ்வாறு வெற்றியளிக்கவில்லையென்றால் அதற்கான காரணங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
நாம் செய்யும் தவறுகள்
பொதுவாக சிலர் உடல் எடையை குறைக்க வேண்டிய தேவை இருக்கும் போது, அதற்காக சில ரெமடிகளை பின் தொடர்வார்கள். ஆனால் அது காலப்போக்கில் குறைய ஆரம்பிக்கும் போது இவ்வாறு செய்வதால் சில நேரங்களில் எம்முடைய முயற்சி வெற்றியளிக்காது.
கோக், பெப்சி போன்ற குளிர் பானங்களை முற்றாக குறைக்க வேண்டும். ஏனெனின் இது உடலுள்ள சக்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். நாம் பருகுவதை குறைத்துவிட்டால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
பொதுவாக சிலர் பரதநாட்டியம், யோகா மற்றும் உடற்பயிற்சி ஆசியராக இருப்பார்கள். அவர்களின் பணியாற்றும் காலம் முடிந்ததும் அதனை நிறுத்தி விடுவார்கள் இது போன்று செய்யும் போது முயற்சி வெற்றியளிக்காது.
உடல் எடையை அதிகரிப்பதில் உணவு முக்கிய இடத்தை பிடிக்கிறது அதனால் உணவை ஒரு குறிப்பிட்டளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் தினமும் இளம் சூடு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும் இது போன்ற செயற்பாடுகளை தவறும் பட்சத்தில் உடல் எடை அதிகரிக்கும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜீஸ், சுரக்காய் ஜீஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இது நமக்கு சிறந்த பயனை தருவதோடு விரைவாகவும் செயற்படுகிறது.