முடி தாறுமாறாக கொட்டுகின்றதா? இதை மட்டும் செய்தாலே போதும்
Hair Growth
By Manchu
உடலில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல் உள்ளதா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி, வைட்டமின் இ மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை அடிக்கடி எடுத்துகொள்ள வேண்டும்.
தலைமுடி உதிர்விற்கு முக்கிய காரணம்
- தலை முடியில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதின் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும்.
- பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். தலையில் இருக்கும் பொடுகை அகற்றுவதின் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம்.
- தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்வு ஏற்படும். நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.
- கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி கொட்டுவதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெற முடியும்.

- வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிரை ஒரு அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளிப்பதால் கேசத்துக்கு ஊட்டசத்து கிடைத்து முடி கொட்டுவது குறையும்.
- தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை அலசுவதின் மூலம் முடி கொட்டுவதில் இருந்து விடுபடலாம்.
- வெதுவெதுப்பான எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன.
- தலைக்கு குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றி குளிப்பதினாலும் முடி உதிர்வு ஏற்படலாம். அதிக அளவில் மருந்து சேர்க்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுத்துவதாலும், அதிக உப்பு கலந்த நீரினை பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும்.
some-natural-remedies-to-prevent-hair-fall
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US