உடலில் அரிப்பை தடுக்கும் உணவுகள் குறித்து தெரியுமா?
உடம்பில் அரிப்பு மற்றும் அலர்ஜி வருபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பொதுவாக எண்ணெய்யில் பொறித்த உணவுகள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுகள் சாப்பிடும் போது சிலருக்கு அரிப்பு ஏற்படுகின்றது.
இந்த அரிப்பு மற்றும் அலர்ஜியை சில உணவுகளை எடுத்துக்கொண்டால் வராமல் தடுக்க முடியும்.
அலர்ஜி, அரிப்பு வராமல் தடுக்கும் உணவுகள்
அலர்ஜி ஏற்படுபவர்கள் சிக்கன் சூப் சாப்பிடுவது நல்லது.
மீன் எண்ணெய்யில் அரிப்பினை தடுக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும் அமினோ அமிலமும் அரிப்பு ஏற்படாமல் தடுக்கின்றது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைத்து ஆரோக்கியத்தை காத்துக் கொள்கின்றது.
வாழைப்பழம் அரிப்பை கட்டுப்படுத்த உதவுகின்றது. இதில் பொட்டாசியம், ஹிஸ்டமைன், ஊட்டச்சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
அரிப்பு மற்றும் அலர்ஜியை தடுக்க பூசணிக்காய் விதைகள் மற்றும் எள்ளு இவற்றினை சேர்க்கலாம். ஏனெனில் இதில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
சுத்தமான காய்கறிகளை எடுத்துக் கொள்வது நல்லது. இவை தோல் அலர்ஜியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |