வீட்டை சுற்றி பாம்பு தொல்லை இருக்கா ? இதை மட்டும் வையுங்கள்...அலண்டு இருக்க இடம் தெரியாமல் ஓடிடும்!
Snake
By Nivetha
எலி தொல்லையை விட பாம்பு தொல்லை மிகவும் பயத்தினை ஏற்படுத்த கூடிய ஒன்று.
அதனால் வீட்டை சுற்றி பாம்பு தொல்லை இருந்தால் முதலில் அதற்கு முடிவு கட்ட வேண்டும்.
பாம்பு தொல்லை இருக்கா? இதோ டிப்ஸ்
- சாணபாலுடன், பெருங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து தெளித்தால் பாம்பு அலண்டு ஓடி விடும்.
- வீட்டில் அடிக்கடி சாம்பிராணி புகை போட்டு வந்தாலும் பாம்பு தொல்லை இருக்காது.
- பிளீச்சிங் பவுடர் அல்லது பூச்சிக்கொல்லி பவுடர் கொண்டு தெளித்தாலும் பாம்பு வராது.
- இதேபோல் குருணை மருந்தை வாங்கி அதனோடு ஆற்றுமணல் கலந்து வீட்டை சுற்றி தெளித்தால் பாம்பு வராது.
- வீட்டில் தர்ப்பப்பை புல் வளர்த்தாலும் பாம்பு அண்டாது. இதேபோல் மண்ணெண்ணெய்யில் உப்பு சேர்த்து அதனை தண்ணீரோடு கலந்து அடித்தாலும் பாம்பு வீட்டுப் பக்கமே வராது.
- இதையெல்லாம் தாண்டி சில செடிகளை உங்கள் வீட்டில் வைத்தால் அதன் வாசனைக்கு பாம்பு உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
- சிறியாநங்கை, பெரியநங்கை செடி, நாகதாளி, ஆகாச கருடன் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து பராமரியுங்கள். அந்த வாசனைக்கே பாம்பே வராது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US