கையில் துளியும் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப ஒரு டப்பாவுல இத போட்டு வையுங்க
கடன் வலையில் சிக்காமல் உங்கள் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லையா? இதனை சமாளிக்க ஜோதிடத்தில் வழியுண்டு.
எவ்வளவு வேகமாக பணம் கைக்கு வருகிறதோ, அதே வேகத்தில் கையில் இருந்து பணம் கரைந்து விடும்.
வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி, பணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க ஒருசில பரிகாரங்கள் உள்ளன. அதை சரியாக செய்து வருவதன் மூலம் பணம் கையில் நிலைத்திருப்பதைக் காணலாம்.

மாவு டப்பாவில் துளசி
உங்கள் வீட்டில் உள்ள மாவு டப்பாவில் 5 துளசி இலைகள் மற்றும் 2 குங்குமப்பூ விதைகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த மாவானது சனிக்கிழமைகளில் அரைத்துவிட வேண்டும்.
முக்கியமாக அந்த மாவில் கடவை பருப்பும் கலந்து அரைத்திருக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, வீட்டில் பணமும் நிலைத்திருக்கும்.

காளி தேவியை வணங்கவும்
தினமும் வீட்டில் காளி தேவியை வழிபட வேண்டும்.
மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காளி கோவிலுக்கு சென்று தூபம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்ட பின்னர் பிரசாதத்தை வழங்க வேண்டும்.
அதோடு காளி தேவிக்குரிய மந்திரத்தைக் கூறி, உங்கள் விருப்பங்களை அவளிடம் கேளுங்கள்.
இப்படி செய்வதன் மூலம், உங்களைச் சுற்றி அல்லது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் நுழையும்.