உலகையே இருள் சூழ வைக்கும் சூரிய கிரகணம்.. எங்கெல்லாம் தெரியும்?
பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டு நான்கு கிரகணங்கள் நிகழும் என ஆண்டு துவக்கத்தில் வானியலாளர்கள் கூறியிருந்தார்கள்.
அதன்படி, இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழும் என கூறப்பட்டது. அதில் ஒரு சூரிய கிரகணமும் இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழ்ந்து விட்டன.
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நடந்த முழு சந்திர கிரகணத்தில் நிலா சிவப்பு நிறத்தில் இருப்பதை நம்மிள் பலரும் பார்த்திருப்பார்கள். இந்த காட்சியை மக்கள் பலரும் பார்த்து ரசித்தார்கள்.
இதனை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் நாளைய தினம் செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை நாளில் நடைபெறவுள்ளது.
இந்த நாளை சர்வ பித்ரு அமாவாசை என்றும் கூறுகிறார்கள். அதற்கு அடுத்த நாளில் நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகிறது.
அந்த வகையில், நாளைய தினம் சூரிய கிரகணங்கம் எங்கு தெரியும்? என்ற விவரங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
கிரகண நேரம்
சூரிய கிரகணம் இந்திய நேரப்படி, நாளை இரவு 11.00 மணி முதல் அதிகாலை 3.23 மணி வரை இருக்கும். இரவில் நடப்பதால் இந்தியாவில் தெரியவதற்கு வாய்ப்பு இல்லை.
மேலும், நாளை ஆரம்பமாகும் சூரிய கிரகணம் தெற்கு பசிபிக் பெருங்கடல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல், பாலினீசியா, மெலனேசியா, நோர்போக் தீவு, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன் போன்ற நாடுகளில் இருந்து பார்க்கலாம். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சில நாடுகளில் சூரியன் 80% வரை மறைந்து, பகல் நேரம் திடீரென இருள் சூழ்ந்திருக்கும்.
முக்கிய குறிப்பு
சூரிய கிரகணம் நிகழும் இடங்களில் இருந்து பார்ப்பவர்கள் நேரடியாக பார்ப்பதை தவிர்க்கவும்.
விசேஷ கிரகணக் கண்ணாடிகள் (Eclipse Glasses) அல்லது பாதுகாப்பான தொலைநோக்கிகள் மூலம் மாத்திரமே பார்க்க முடியும். இதனை தவறும் பட்சத்தில் கண்களுக்க பாதிப்பு வரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |