வியப்பில் தமிழர்கள்! மண்னை சாப்பிடும் அதிசய தீவு.... மிரள வைத்த விஞ்ஞானிகள்
நாம் வாழும் இந்த பூமியானது பல்வேறு விசித்திரங்களினால் சூழப்பட்டுள்ளது.
இந்த விசித்திர பூமியில் வாழும் மக்களின் செயற்பாடுகளும் சில வேலைகளில் வினோதமாக இருக்கும்.
இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டுதான் ஈரான் நாட்டில் உள்ள ஹார்ஸ்மஸ் தீவு.

ஈரான் நாட்டில் உள்ள ஹார்ஸ்மஸ் தீவில் மக்கள் உணவில் மண்ணை கலந்து சாப்பிடுகின்றார்களாம்.
இங்கு மண்ணைப்போட்டு சமைக்கும் உணவு மிக சுவையானதாகவும் இருக்குமாம்.
இந்த தீவிற்கு வானவில் தீவு என்ற பெயரும் உண்டு. அதற்கு காரணம் இங்கு இருக்கும் மண்ணின் நிறம் தான்.

இந்த தீவில் வெள்ளை, மஞ்சளம், பச்சை, ஆரஞ்ச், பேஜ், பிரெளன், லைட் டார்க்யூஸ், தங்க நிறங்களில் மண் இருக்கிறது.
இந்த ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு சுவையை கொண்டது.
அதனால் இந்த மண் உணவாகவும் பயன்படுகிறது.

இந்த மண் மட்டுமல்ல ஒட்டு மொத்த தீவும் உண்ணும் தன்மை கொண்டது தான்.
அறிவியல் விஞ்ஞானிகளின் படி இந்த ஒட்டு மொத்த தீவுமே உப்புகளில் நிறைந்துள்ளதாக கூறுகின்றனர்.
அதனால் இதை மக்கள் உணவாக பயன்படுத்தினாலும் உயிருக்கு ஆபத்து இல்லையாம். எனினும், மண்ணை உணவில் சேர்த்து சாப்பிடுவது என்பது தமிழர்களுக்கு அதிர்ச்சியே.