இதய நோயாளிகளுக்கு வாழ்வுக் கொடுக்கும் பருப்பு கீரை குழம்பு- யாரெல்லாம் சாப்பிடலாம்?
நாம் தினமும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் இருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காய்கறிகள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகள் சாப்பிட வேண்டும் என சாலட் தான் செய்து சாப்பிட வேண்டும் என்பது அல்ல மாறாக கூட்டு, குழம்பு, சாம்பார் என விதவிதமாக செய்து சாப்பிடலாம்.
அப்படி உடலுக்கு ஆரோக்கியத்தை குறைவில்லாமல் கொடுக்கும் பருப்பு கீரை கிராமங்களில் சாதாரணமாக கிடைக்கும். இதனை கங்கா வள்ளி என்றும் அழைப்பார்கள். ஏகப்பட்ட சத்துக்களுடன் இருக்கும் இந்த கீரையை பலரும் சாப்பிட விரும்பமாட்டார்கள்.
அந்த வகையில், சாம்பராக எடுத்துக் கொள்ளும் கங்கா வள்ளியில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை பதிவில் பார்க்கலாம்.

வித்தைக் காட்டும் பருப்பு கீரை குழம்பு
1. இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒமேகா-3 சத்து நிறைந்த பருப்பு கீரையை அடிக்கடி உட்க் கொள்வது சிறந்தது. ஏனெனின் இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை இது அகற்றுகிறது. அதே போன்று, குழந்தைகளின் மூளை வளர்ச்சி, ஆட்டிசம் குறைபாடு ஆகிய பிரச்சினைகளை இது வரவிடாமல் தடுக்கிறது.
2. வைட்டமின்-ஏ சத்து நிறைந்த பருப்பு கீரையை அடிக்கடி சாப்பிடும் பொழுது சருமத்திற்கு ஒருவிதமான பொலிவு கிடைக்கும். சரும பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இது போன்று ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. வைட்டமின்-சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற உடலுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் கீரையில் அதிகம் உள்ளது. இது மலச்சிக்கல் போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் மருந்தாக மாறுகிறது. குடல் ஆரோக்கியம் குறித்து கவலையாக இருப்பவர்கள் இந்த கீரையை வாரத்திற்கு இரண்டு தடவைகள் கூட உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
4. ஆஸ்டியோபோரோசிஸ், சொரியாசிஸ் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சாப்பிடுவது, என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். அப்படியானவர்கள் பருப்பு கீரை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுடைய எலும்புகள் மற்றும் தசைகளுக்கு கால்சியம் சத்தை கொடுக்கிறது.

5. மோசமான வாழ்க்கை முறை காரணமாகவும், ஆரோக்கியமற்ற பழக்கங்கள் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு பலருக்கும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நீண்ட நேரம் பசியில்லாமல் உங்களுடைய டயட்டை கொண்டு செல்வதற்கு இந்த கீரை உதவியாக இருக்கும். இதனால் தான் கிராமங்கள் வாழ்பவர்கள் இந்த கீரையை மண்ணின் பொக்கிஷமாக பார்க்கிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |