திருமணத்தில் சோபிதா அணிந்திருந்த நகை சமந்தாவினுடையதா? வெளியான உண்மை
நடிகை சோபிதா திருமணத்தின்போது அணிந்திருந்த நகை நடிகை சமந்தாவினுடையது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான உண்மை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சோபிதா நகை
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் நேற்று பிரமாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டினுடைய சொந்தங்களும் திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி தான் சமந்தா. இவரை நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையிலும் சில மனஸ்தாபங்கள் காரணமாக விவாகரத்து பெற்றனர்.
இதை தொடர்ந்து நடிகை சோபிதாவுடன் டேட்டிங் செய்து கொண்டு வந்த நிலையில் இவர்கள் நேற்றைய தினம் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நடிகை சோபிதா திருமணத்தில் அணிந்திருந்த நகை சமந்தாவினுடையது என ரசிர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் இந்த நகை சமந்தாவினுடையது அல்ல. திருமணத்தின்போது சமந்தா வெள்ளை நிறம் கலந்த தங்கப்புடவையை அணிந்திருந்தார். அதற்கு ஏற்றவாறு மாம்பழ டிசைன் நெக்லஸும் அவர் அணிந்திருந்தார்.
சோபிதா தனது திருமணத்தில் தங்க நிற புடவையும் அதற்கு ஏற்றதாக சில நகைகளை அணிந்திருந்தார்.
அவர் அணிந்திருந்த நகைகளில் ஒரு நகை சமந்தா அணிந்திருந்த நகையை போன்று இருப்பதாக சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தெரிவித்திருந்த நிலையில் அது சமந்தாவின் நகை இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |