வாரிசு நடிகரின் மனைவி சோபிதா துலிபாலாவின் Fitness சீக்ரெட் பற்றி தெரியுமா? ஃபாலோ பண்ணுங்க
நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மருமகள் ஆக போகும் சோபிதா துலிபாலாவின் Fitness ரகசியங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை சோபிதா துலிபாலா
இந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சோபிதா துலிபாலா மலையாள திரையுலகிலும் பிரபல நடிகையாக திகழ்கிறார்.
மலையாளளத்தில் இவர் நடித்த “குருப்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக சோபிதா துலிபாலா இருந்து வருகிறார். இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்தும் வருகின்றனர்.
ஆந்திராவை பிறப்பிடமாக கொண்ட சோபிதா பட்டப்படிப்பை முடித்தவுடன் மாடலிங் துறையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார். அந்த பணியில் இருந்து கொண்டே ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் கலந்து வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து மிஸ் இந்தியா எர்த் - 2013 என்ற பட்டத்தையும் வென்றிருக்கிறார்.
தற்போது 32 வயதாகும் சோபிதாக அவருடைய உடல் ஸ்லிம் ஃபிட்டா இருப்பதற்கான காரணத்தை பேட்டிகளில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விவரங்களை தொடர்ந்து பதிவில் காணலாம்.
Fitness சீக்ரெட்
1. 32 வயதான சோபிதா துலிபாலா உடற்பயிற்சி ஆர்வலராக இருந்து வருகிறார்.
2. பைலேட்ஸ் என்பது உடற்பயிற்சி வடிவமாக பார்க்கப்படுகின்றது. இந்த பயிற்சியானது சமநிலை, நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த உடல் வலிமையை குறிக்கிறது. உடல் ஆரோக்கியத்தையும் தாண்டி மன ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வதாக கூறப்படுகிறது.
3. சோபிதா துலிபாலா தினமும் அவர் சாப்பிடும் உணவுடன் பகுதியாக சுத்தமான நெய்யை சேர்த்துக் கொள்வாராம். காலையில் எழுந்தவுடன் முழு தானிய உணவுடன் எடுத்து கொள்வாராம்.
4. ஓட்மீலுடன் ஃபிரெஷ்ஷான பழங்கள், கிரீக் யோகர்ட் மற்றும் சிறிது தேன் ஆகியவற்றுடன் காலை உணவை சாப்பிடுவார். இந்த டயட் அன்றைய நாளை உற்சாகமாக வைத்து கொள்ளும்.
5. நாள் முழுவதும் உடலை ஹைட்ரேட்டாக வைத்துக் கொள்வதற்காக நடிகை ஷோபிதா நிறைய தண்ணீர் குடிக்கிறார். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் அருந்தி வருகிறார்.
6. மதிய உணவில் ஆரோக்கியம் தரும் உணவுகளை சேர்த்து கொள்வாராம். மதிய உணவில் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் கொண்டைக்கடலை நிறைந்த சாலட் செய்து சாப்பிடுவாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |