ஊற வைத்த பாதாம் ஏன் சாப்பிட வேண்டும்? பலரும் அறியாத உண்மை
உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் காலை உணவின் மூலமே கிடைக்கின்றன. அதற்காகக் கிடைத்ததை எல்லாம் காலை நேரத்தில் வயிற்றுக்குள் போட்டுத் திணிக்கக்கூடாது.
மேலும் பாதாம் பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், மோனொசாச்சுரேட்டெட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டர் கொழுப்புகள் மற்றும் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட நல்ல ஆதாரமாகும்.
அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் தவிர கால்சியம் மற்றும் இரும்பு போன்றவையும் பாதாமில் உண்டு. இருப்பினும் இதனை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகின்றது.
அந்த வகையில் தற்போது பாதமை ஊறவைத்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஊற வைத்த பாதாமின் நன்மைகள்
ஊறவைத்த பாதாமில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ள நிலையில், இவை இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஊறவைத்த பாதாமை உட்கொள்வது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுவதுடன், நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகின்றது.
நாள் முழுவதும் உடலில் ஆற்றலை தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் ஊறவைத்த பாதாம் சிறந்த தேர்வாக அமையும்.
ஊறவைத்த பாதாமில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால், இவை அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிப்பதுடன், நினைவுத்திறனையும் அதிகரிக்கின்றது.
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். இளமை தோற்றத்தை தக்கவைக்கவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |