16 வருட வித்தியாசம்... காதல் மலர்ந்த அந்த தருணம்: சினேகன்- கன்னிகா காதல் கதை
தமிழ் திரையுலகில் கவிஞர் சினேகனின் பாடலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது, இதுவரைக்கும் 700க்கும் மேற்பட்ட படங்களில் 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.
பல பாடல்கள் சூப்பர் ஹிட், விருதுகளையும் வாங்கி குவித்தது, சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னிகா ரவி என்பவரை காதலித்து கரம் பிடித்தார்.
தங்களது காதல் பயணம் குறித்து கன்னிகா பேசுகையில், ஒருநாள் படத்தின் ஆடிஷனுக்காக சென்றிருந்தேன்.
அங்கு தங்கை கதாபாத்திரம் என்றார்கள், சினேகன் ஆடிஷன் செய்வார் என கூறினர், அவர் யார் என்று எனக்கு தெரியாது.
பின்னர் தான் அவர் எழுதிய பாடல்கள் என நீண்ட பட்டியல் கொடுக்கப்பட்டது, அவை எல்லாம் நான் சிறுவயதில் கேட்டு ரசித்த பாடல்கள்.
உடனே இதயம் படபடத்தது, நல்லபடியாக ஆடிஷனும் முடிந்தது, கடைசியாக ”நல்ல சந்திப்பு கனி” என மெசேஜ் அனுப்பியிருந்தார்.
நான் பதிலுக்கு ஸ்மைலி அனுப்பியிருந்தேன், அது தான் தொடக்கம், நண்பர்களாக நிறைய பேசினோம்.
இருவருக்கும் பிடித்துவிட்டது, அவர் தன் காதலை சொன்னார், நான் தான் நேரம் எடுத்துக் கொண்டேன்.
இருவருக்கும் பொறுப்புகள் இருந்தது, என் வீட்டில் சொன்னாலும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என தெரியும்.
நான் எடுக்கும் முடிவு சரியானது தான் என அவர்களுக்கும் தெரியும், ஆனால் நான் நல்ல நாளுக்காக காத்திருந்தேன்.
திருக்கார்த்திகை அன்று விளக்கு ஏற்றப்போகிறேன் என கூறிவிட்டு, மஞ்சள் கயிறு வாங்கினேன், அங்கே எனக்கு குங்குமம் வைத்துக் கொடுத்தார்கள்.
இவரது வீட்டுக்கு வந்து என் அத்தை புகைப்படத்துக்கு முன்னாடி மஞ்சள் கயிறு வைத்து இவருக்கு காத்திருந்தேன்.
அவர் வந்ததும் காதலை சொல்ல திக்குமுக்காடிவிட்டார், ஆனால் பின்னாளில் அந்த தாலி திருடுபோய்விட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும் இருவரும் சாதிக்கவும், குடும்ப பொறுப்புகளும் இருந்ததால் காதல் திருமணத்தை தள்ளி வைத்ததாகவும், சுக துக்கங்களில் அக்கறையாக இருந்ததால் தங்களது காதலும் பக்குவப்பட்டதாக நெகிழ்கிறார் சினேகன்.