இரட்டை குழந்தைகளை கைகளில் வாங்கிய தருணம்... நெகிழ்சியான காணொளியை வெளியிட்ட சினேகன் - கன்னிகா
பாடலாசிரியர் சினேகன்- கன்னிகா தம்பதியினர் தங்களின் இரட்டை குழந்தைகளை கையில் வாங்கிய நெகிழ்சியாக தருணத்தை காணொளியாக வெளியிட்டுள்ளனர். குறித்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரதித்து வருகின்றது.
சினேகன்
தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு புத்தம் புது பூவே என்ற பாடல் எழுதி பாடலாசிரியராக சினிமா துறையில் அறிமுகமானவர் தான் பாடலாசிரியர் சினேகன்.
அதனை தொடர்ந்து பாண்டவர் பூமி திரைப்படத்தில் அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா ஆகிய ஹிட் பாடல்களை கொடுத்தார்.
அடுத்தடுத்து இவருக்கு வந்த அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திய சினேகன் மௌனம் பேசியதே படத்தில் ஆடாத ஆட்டமெல்லாம், சாமி படத்தில் கல்யாணம் தான் கட்டிகிட்டு, ஆட்டோகிராப் படத்தில் ஞாபகம் வருதே, ராம் படத்தில் ஆராரிராரோ, ஆடுகளம் படத்தில் யாத்தே உள்ளிட்ட பாடல்களை எழுதியிருந்தார். அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் கடந்த 2021ம் ஆண்டு சினேகன் தனது நீண்டநாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தார்.
சினேகனின் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 25ம் தேதி அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
இந்நிலையில் தனது மகள்களை கையில் வாங்கிய தருணத்தை அழகிய காணொளியாக வெளியிட்டுள்ளார் சினேகன். குறித்த காணொளிக்கு இணையத்தில் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |