குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகில் சினேகா! மஞ்சள் நிற உடையில் பேரழகியாய் ஜொலிக்கும் புகைப்படம்
நடிகை சினேகா மஞ்சள் நிற சுடிதாரில் போட்டோஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை சினேகா
தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா என்பதும், இவர் ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்பு பல படங்களில் நடித்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் கணவருடன் கருத்துவேறுபாடு என்றும் இதனால் இருவரும் பிரிய இருப்பதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு சினேகா புகைப்படத்தினை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.
தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் கூடிய புகைப்படங்களை அவ்வப்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சினேகா
அவ்வப்போது விதவிதமான உடையில் போட்டோஷுட் எடுத்து வெளியிட்டுவரும் சினேகா தற்போது மஞ்சள் நிற சுடிதாரில் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
மஞ்சள் நிற உடையில் சினேகா வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள், குழந்தைகள் பிறநத பின்பும் குறையாத அழகில் ஜொலிப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.