நடிகை சினேகா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்: சினேகாவை மிஞ்சிய மகள்
நடிகை சினோகாவின் மகள் ஆத்யந்தாவின் மூன்றாவது பிறந்தநாளை கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட நிலையில், இவற்றின் காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளியாகி லைக்ஸை குவித்து வருகின்றது.
சினேகா பிரசன்னா
நடிகை சினேகா, பிரசன்னா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் காணப்படுகின்றனர்.
சமீபத்தில் இந்த தம்பதிகள் பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவதாக முடிவெடுத்துள்ளனர் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவியது.
பின்பு நடிகர் பிரச்சன்னா மனைவி சினேகாவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்ட நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
குறித்த தம்பதிகள் எந்தவொரு பண்டிகை என்றாலும் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடி குடும்பத்துடன் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது சினேகாவின் மகள் ஆத்யந்தாவின் பிறந்தநாள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது.
ஆசிர குழந்தைகளுடன் மகிழ்ச்சியில் மகள்
ஆம் தனது மகளின் பிறந்தநாளை குழந்தைகள் ஆசிரமம் ஒன்றில் கொண்டாடியுள்ளனர். இந்த காணொளியினை குறித்த தம்பதிகள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
இதில் சினேகாவின் மகள் ஆசிர குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நடனமாடி, விளையாடியுள்ளார். மேலும் அங்கிருந்த குழந்தைகளுக்கு புதிதாக ஆடையும் எடுத்துக் கொடுத்துள்ளனர்.
மேலும் மகளின் பிறந்தநாளுக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள் மட்டுமே அழைத்து விருந்து கொடுத்துள்ளார். இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. குறித்த புகைப்படத்தி ரசிகர்கள் தங்களின் லைக்குகளை குவித்து வருவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.