14வது திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடிய சினேகா -பிரசன்னா! படு வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை சினேகா தனது 14 ஆவது ஆண்டு திருமண நாளை காதல் கணவர் பிரசன்னாவுடன் வெளிநாட்டில் அசத்தலாக கொண்டாடிய தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அசுர வேகத்ததில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை சினேகா
தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் சினேகா அறிமுகமாகினாலும், விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தன் பின்னர் தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.அதனை தொடர்ந்து சினேகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ஹிட் கொடுக்க சினேகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. அதன் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர அது திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு திருமணத்தில் முடிந்தது.

இந்த தம்பதியினருக்கு விஹான் (Vihaan) என்ற மகனும், ஆத்யந்தா (Aadhyantaa) என்ற மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின்னரும், சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினேகா சிறப்பான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். அது மாத்திரமன்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவரைாகவும் பங்கேற்று வருகின்றார்.

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை சினேகாவுக்கு இப்போது 44 வயது ஆகிறது. ஆனால் இப்போதும் அவர் பார்ப்பதற்கு குறையாத இளமையுடன் ரொம்பவே ஃபிட்டாக காட்சியளிக்கிறார்.

இன்றைய தினம் (மே 11) சினேகா - பிரசன்னா தங்களின் 14 ஆவது திருமண நாளை கொண்டாடுகளின்றார்கள். திருமமாகி பல வருடங்கள் கடந்த நிலையிலும் இன்று அதே காதலுடனும் நெருக்கதுடனும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்நிலையில் திருமண நாளை வெளிநாட்டில் அசத்தலாக கொண்டாடி சினேகா மற்றும் பிரசன்னா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |