இவங்களுக்கு வயசே ஆகாதா! இன்னும் அப்படியே இருக்காங்களே... சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
நடிகை சினேகா மஞ்சள் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை சினேகா
முதன் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிறகு தமிழில் மாஸ் காட்டிய நடிகைதான் சினேகா. தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் அறிமுகமானார் ஆனால் அந்தத் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவில் போகாததால் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றார்.
பின்னர் விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்து அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். அதன்பின்னர் அடுத்தடுத்த படங்கள் எல்லாம் வெற்றியைப் பெற ஆரம்பித்தது. இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருந்தார்.
பிரசன்னாவுடன் காதல்
அதனால் அவரை இன்னும் புன்னகை அரசி என்ற பெயரையும் வாங்கி விட்டார். பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா.
இப்படப்பிடிப்பில் இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்களாகினர். இந்த நட்புநாளடைவில் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் மேல் காதல் மலர்ந்துள்ளது. அதன்பிறகு இருவரும் காத்திருந்து இருவர் வீட்டிலும் சம்மதம் வாங்கி திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு விஹான் மகனும் ஆதியன்தா மகளும் இருக்கிறார்கள்.
லேட்டஸ்ட் போட்டோஸ்
திருமணம், குழந்தைகள் என ஆனப்பின்பு சினிமாவில் இருந்து விலகியிருந்த சினேகா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில் இன்று கலக்கலான புகைப்படங்களை வெளிட்டிருக்கிறார் இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சினேகாவிற்கு வயசே ஆகாதா 41 வயதில் அப்படியே இருக்காங்களே என கமெண்ட் செய்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |