பாம்பு கடித்த பின்பு வாவா சுரேஷ் என்ன செய்தார்? மருத்துவமனையில் அவரின் நிலை! வைரல் காணொளி
பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தில் ராஜநாகம் தீண்டியதால் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் பல ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார்.
இந்நிலையில், கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷுக்கு தகவல் வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாவா சுரேஷ், குறித்த ராஜ நாகத்தினை பிடித்துவிட்டு, அதனை பையில் போடுவதற்கு முயற்சித்த போது அவரது வலது தொடையில் பாம்பு கடித்துள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
பாம்பு கடித்த உடனே சுயநினைவினை இழந்ததாக கூறப்பட்ட நிலையில், குறித்த பாம்பு தாக்கிய பின்பு பாம்பை கீழே போட்டுவிட்டு கடித்த பகுதியில் ரத்தத்தினை வெளியேற்றியுள்ளார்.
அதன் பின்பு குறித்த பாம்பை பைக்குள் அடைக்க முற்பட்டும் முடியாததால் அதனை போத்தலில் அடைத்துவிட்டு, பின்பு பாம்பு கடித்த இடத்திற்கு சற்று மேலே துணியினால் காலை கட்டியுள்ளார். இந்த முழுகாட்சி தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது இவரது சிகிச்சையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகவும், மருத்துவர்கள் கூறியநிலையில், மருத்துவமனையில் அவர் தலை மற்றும் கையை அசைத்த காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.