தன்னை சீண்டிய முயலை பயங்கரமாக பந்தாடிய பாம்பு! பதபதைக்க வைக்கும் காட்சி
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலான மக்கள் பீதியில் உறைந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பாம்பு ஒன்றினை சீண்டிய முயல் இறுதியில் பட்ட கஷ்டத்தினை காணொளியில் காணலாம்.
சமூக வலைத்தளங்களில் பாம்புகளின் ஆச்சரிய காட்சிகள், சில விலங்குகளின் சுவாரசிய காட்சி அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் பூங்காவின் மூலை ஒன்றில் இருந்த பாம்பினை முயல் சீண்டியுள்ளது. முதலில் முயலின் சீண்டலை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது.
ஆனால் அவ்வாறு சென்ற பாம்பை மீண்டும் முயல் வம்புக்கு இழுத்து சீண்டியுள்ளது. கோபமைடைந்த பாம்பு முயலை தாக்குகிறது. பாம்பு முயலைத் தாக்க, முயலும் அவரிடமிருந்து தப்பிக்க குதிக்கிறது. ஆனால் இறுதியில் பாம்பு அதனை கடித்து, தூக்கி எறிந்து விடுகின்றது.
குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஏராளமானோர் இக்காட்சியை பகிர்ந்து வருகின்றனர்.