நோயாளியின் படுக்கையறைக்கு கீழே பாம்பு! அதிர்ச்சியூட்டும் வீடியோ
இந்தியாவின் தெலுங்கானா மாநி்லத்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளியின் படுக்கையறைக்கு கீழே பாம்பு ஒன்று கிடந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவின் தெலுங்கானாவில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை, மிக பழமையானதும்- பெரிய மருத்துவமனையும் இதுவாகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நோயாளியின் படுக்கையறைக்கு கீழே பாம்பு ஒன்று இருந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியது.
உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்புறப்படுத்திவிட்டனர்.
இதற்கு முன்னதாக இதேபோன்றதொரு சம்பவம் மருத்துவமனையில் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர், ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நபரை எலிகள் கடித்து குதறியதாகவும், இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து இரண்டு நாட்களில் உயிரிழந்துவிட்டதாகவும் தெரியவருகிறது.
இப்படியான தொடர்ச்சியான சம்பவங்களால் மக்களின் பீதி மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது, எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
second time in a month, snake was spotted in Mahatma Gandhi Memorial (MGM) Hospital Warangal which is the oldest and biggest government hospital in North #Telangana. pic.twitter.com/OjdICPECrp
— Ashish (@KP_Aashish) October 24, 2022