Viral VIdeo: பாம்பு என்று நினைத்து பல்லியைக் கொஞ்சிய மலைப்பாம்பு.... கடைசியில் தான் டுவிஸ்ட்
Snake Caress Lizard: ராட்சத மலைப்பாம்பு ஒன்று எதிரே இருந்த Monitor Lizard-ஐ பாம்பு என்று நினைத்து செய்துள்ள செயல் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி ஆகும். ஏனெனில் பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால் மனிதர்களின் உயிரை எளிதில் எடுத்துவிடும் என்ற அச்சமே.
ஆனால் சமீப காலங்களில் பலரும் பாம்புகளை அசால்டாக பிடித்து விளையாடவும் செய்கின்றனர். ஆனால் சில இடங்களில் பாம்பு கடித்து உயிரிழக்கும் நபர்களும் இருக்கின்றனர்.
சமீபத்தில் கூட வீட்டிற்குள் இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த தாயையும், அந்த குழந்தைகளையும் பாம்பு கடித்துள்ளது. இதில் பிள்ளைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தாய் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக கூறப்பட்டது.

ஒரு சில இடங்களில் மனிதர்களுக்கு தெரியாமல் அவர்களது வீட்டிற்குள் பதுங்கி தனது இனப்பெருக்கத்தினை செய்து, கடைசியில் குடும்பமாக வந்து அதிர்ச்சியும் கொடுக்கின்றது.
அவ்வாறான சில பாம்புகள் கடிப்பது கூட தெரியாமல் மனிதர்கள் இருக்கும் தருணத்தில் இறுதியில் உயிரும் பறிபோய்விடுகின்றது.
ஆனால் நாம் இங்கு காணும் காட்சி சற்று சுவாரசியத்துடனும், நகைச்சுவையாகவும் இருக்கின்றது.
பல்லியைக் கொஞ்சிய பாம்பு
அதாவது ராட்சத மலைப்பாம்பு ஒன்று பல்லி ஒன்றினை கொஞ்சி பாசத்தினை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. இவைகளின் பாச விளையாட்டு சில நொடிகள் சென்று கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் ராட்சத பல்லி தனது காலை வெளியே எடுத்துள்ளது. அதுவரை தனக்கு எதிரே இருப்பது பாம்பு என்று நினைத்துதான் இந்த பாச விளையாட்டு நடைபெற்றுள்ளது.
இவை மிருகங்களை வளர்க்கும் இடத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளது போன்று காணப்படுகின்றது. Nature Unedited என்ற X பக்கத்தில் தான் இக்காட்சி பகிரப்பட்டுள்ளது.

பல்லியின் கால்களைப் பார்த்த பாம்பு சுதாரித்துக் கொண்டு அதனை தாக்குவதக்கு முயன்றுள்ளது. ஆனால் பழைய பாசத்தினை பெறுவதற்கு மீண்டும் பாம்பிடம் முயற்சித்த போது பாம்பு தனது தாக்குதலை தீவிரமாக அரங்கேற்றியுள்ளது.
பாம்பின் இவ்வாறான எதிர்வினை இணையத்தில் காணொளியாக வெளிவந்துள்ளது. மேலும் இக்காட்சியினை 6 மில்லியனுக்கு மேலான பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.
The snake thought it was another snake just like it until the lizard showed its leg. Look at the snake’s reaction https://t.co/7Bnq5Z0nTY
— Nature Unedited (@NatureUnedited) November 25, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |