இரும்புச்சத்தை அள்ளித்தரும் ஒரே சட்னி... எப்படி செய்றதுனு தெரியுமா?
Iron RIch Chutney: காலையில் இட்லி, தோசைக்கு இரும்புச்சத்து நிறைந்த அட்டகாசமான கருப்பு உளுந்து சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வொம்.
காலை உணவு என்றால் பெரும்பாலான இந்தியர்களின் வீடுகளில் இட்லி, தோசை என்று தான் இருக்கும். இதற்கு பல வகைகளில் சட்னி, சாம்பார் என்று வைத்து சாப்பிட்டிருப்போம்.
வேர்க்கடலை, புதினா, கொத்தமல்லி, தேங்காய், தக்காளி, வெங்காயம் இவ்வாறு சட்னி வகைகளை சுாப்பிட்டிருக்கும் நீங்கள் தற்போது கருப்பு உளுந்தில் சட்னி செய்து சாப்பிடலாம்.

பொதுவாகவே கருப்பு உளுந்து பெண்களின் கருப்பப்பைக்கு ஆரோக்கியத்தினை அளிப்பதுடன், எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகின்றது. இதில் அதிகப்படியான இரும்புச்சத்தும் காணப்படுகின்றது.
தற்போது இந்த பதிவில் கருப்பு உளுந்து சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கருப்பு உளுத்தம் பருப்பு - 50 கிராம்
வரமிளகாய் - 5
புளி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 2 கொத்து
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, அதில் உளுந்தம் பருப்பை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
இதனுடன் வரமிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை இவற்றினையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி மற்றும் சுவைக்கு தகுந்த உப்பு இவற்றினை சேர்த்து வதக்கி, கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கி வைக்கவும். சற்று ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும்.

பின்பு சட்னிக்கு தாளிப்பு கொடுப்பதற்கு கடாயினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றினை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால் சுவையான கருப்பு உளுந்து சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |