Bigg Boss 10: கொளுத்திப் போட்ட அன்சரின் மனைவி.... கண்ணீரில் சக போட்டியாளர்
Bigg Boss Ansar fight Dhanya: பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்ற உறவினர்களால் அன்சர் தன்யா இருவருக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குடும்பத்தினர் வருகை தந்து வருகின்றனர். தற்போது வீடடில் எட்டு போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.
கடந்த வார எவிக்ஷனின் ஷாதிகா, முகேஷ் இருவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரத்தில் டாஸ்க், நாமினேஷன் எதுவும் இல்லை என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.

நேற்றிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்துள்ளனர். அதாவது நேற்றைய தினம் வினோத் மற்றும் லக்ஷ்மி ப்ரியாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.
இதில் லக்ஷ்மி பிரியாவின் பெற்றோர் அவரிடம் மன்னிப்பு கேட்டு தங்களுடன் இருக்குமாறு கேட்டுள்ளனர். தற்போது அன்சரின் மனைவி குழந்தைகள், ப்ரித்வியின் அம்மா என வந்துள்ளனர்.
இதில் அன்சரின் குழந்தை பேச்சு ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் ரசிகையாக்கியுள்ளது. அதே போன்று அன்சரின் மனைவி அவரது விளையாட்டைக் குறித்து சில கருத்துக்களை எடுத்து வைத்தார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் அன்சர் தன்யாவிடம் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தன்யா அன்சரின் பேச்சை தாங்கமுடியாமல் கண்கலங்கவும் செய்துள்ளார்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |