தலையணைக்கு அடியில் பத்திரமாய் பதுங்கி இருந்த பாம்பு - மெய்சிலிர்க்கும் காட்சி
சமூக வலைத்தள பக்கத்தில் தலையணைக்குள் விஷப்பாம்பு ஒன்று மறைந்திருந்த காட்சி தற்போது வைரலாகிஜ வருகின்றது.
வைரல் காணொளி
நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மாலையில் தலையணை உறைக்குள் விஷப் பாம்பு இருப்பது போன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த அதிர்ச்சியூட்டும் வீடியோவைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் புதிய அச்சம் எழுந்துள்ளது.

குறித்த அந்த காணொளியில் தலையணை உறைக்குள் ஒரு அடி நீளமுள்ள ஒரு பாம்பு ஒளிந்துகொண்டு ஊர்ந்து செல்வதையும், அதன் அருகில் உள்ள மற்றொரு தலையணையின் கீழ் மெத்தைக்கும் படுக்கைக்கும் இடையில் ஒளிந்து கொள்வதையும் வீடியோவில் காணலாம்.
பாம்பு பிடிப்பவர் தற்காப்பு மனநிலையில் இருந்த பாம்பை விரைவாக அணுகினார். பின்னர் விரைவாகவும் அமைதியாகவும் பாம்பைப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் கொள்கலனுக்குள் வைத்து மூடினார்.
#WATCH | Viral Video Shows Poisonous Snake Under Pillow In Nagpur#Maharashtra #nagpur #snake #maharashtranews pic.twitter.com/cMVHDdtjTM
— Free Press Journal (@fpjindia) May 30, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |