கனவில் துரத்தும் பாம்புகள்... அழிவின் அறிகுறியா? பதற வைக்கும் உண்மை
கனவில் பாம்பு வருவது துரோக்கத்தின் அறிகுறியா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இரவு தூங்கும் போது நமக்கு கனவு என்பது வருவது மிகவும் சாதாரணமான ஒன்றாக இருக்கின்றது.
கனவில் மகிழ்ச்சியான காரியங்கள் என்றால் அவ்வளவாக பதற்றப்படுவதில்லை. ஆனால் கனவிற்கும் கூட சாஸ்திரம் பார்க்கப்படுகின்றது.
ஆனால் திகிலூட்டும் கனவுகள் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாகவே இருப்பார்கள்.
குறிப்பாக பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாம்பு கனவிற்கு அர்த்தம்
பாம்பு உங்களை பின்தொடர்ந்து வருவது போன்றோ அல்லது மறைந்திருந்து தாக்க வருவது போன்றோ தெரிந்தால் நிஜ வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான ஒருவர் உங்களுக்கு எதிராக சதி அல்லது துரோகம் செய்ய திட்டமிடுவதாக அர்த்தம்.
கரிய நாகம் கடிக்க வருவது போன்றோ உடம்பில் ஊர்வது போன்றோ கனவு ஏற்பட்டால், கடுமையான நோய், பெரிய வித்து, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை குறிக்கும் எச்சரிக்கையாக இருக்கின்றது.

தொடர்ச்சியாக பாம்புகள் கனவில் வந்தால், உங்களை சுற்றி ஏதோ பில்லி சூனியம், ஏவல் மற்றும் கடுமையான எதிர்மறை ஆற்றல் சூழ்ந்திருப்பதைக் காட்டுகின்றது. உங்களை வீழ்த்த நபர் தயாராக இருப்பதையும் குறிக்கின்றது.
பாம்புகள் உங்களை சூழ்ந்து கொண்டு தப்பிக்க முடியாமல் தவிப்பது போன்று கனவு வந்தால், நிஜ வாழ்க்கையில் சமாளிக்க முடியாத அளவிற்கு எதிரிகளின் சூழ்ச்சி இருப்பதாகவும், நம்பும் நபர்களே எதிராக மாறவும் செய்வார்களாம்.

ஆனால் மனோதத்துவ ரீதியான உளவியல் நிபுணர்கள் கூறுவது, பாமபு கனவில் வருவது வெளியே இருக்கும் எதிரியை விட, நமக்குள் இருக்கும் அடக்கப்பட்ட இச்சை, குற்ற உணர்ச்சி, தீவிரமான பயத்தை குறிக்கின்றது.
நாம் எதிர்கொள்ள முடியாமல் பயந்து ஓடும் ஒரு கசப்பான உண்மை தான் பாம்பு கனவு ஆகும். பாம்பு கனவில் கடிப்பது போன்று கனவு வந்தால், வாழ்க்கையில், காதல், நட்பு, வேலை இவற்றில் ஒன்று முற்றிலும் அழிவதைக் குறிக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |