Viral Video: பாம்பு கடியிலிருந்து நூலிழையில் தப்பிய சிறுவன்... நடுநடுங்க வைக்கும் காட்சி
சீறி எழுந்த தன்னை கடிக்க வந்த பாம்பிடமிருந்து சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி வைரலாகி வருகின்றது.
பைக்கில் மறைந்திருந்த பாம்பு
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
ஆனால் பாம்புகளின் வேட்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் நிலையில் இருக்கும். பாம்புகள் தவளை, மற்றொரு பாம்பை வேட்டையாடுவதை நாம் அவதானித்திருப்போம்.

சிலர் பாம்புகளை பிடித்துக் கொண்டு சுற்றி நிற்பவர்கள் முன்பு கெத்து காட்ட நினைப்பவர்கள். ஆனால் தற்போது வெயில் காலம் என்பதால் பாம்புகள் குளிர்ச்சியான இடத்தை தேடி வருகின்றது.
தற்போது பைக் ஒன்றில் பாம்பு பதுங்கி உள்ள நிலையில், சிறுவன் அதனை அவதானிக்காமல் பைக்கை எடுக்க சென்ற போது, பாம்பு சீறி எழுந்து சிறுவனை கடிக்க வந்துள்ளது.
சிறுவன் நூலிழையில் உயிர்தப்பியதுடன் இக்காட்சி பார்வையாளர்களை நடுநடுங்கவும் வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |