கண்ணாடி போத்தலில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய பாம்பு... காப்பாற்றியது எப்படி?
நல்ல பாம்பு ஒன்றின் தலை கண்ணாடி போத்தல் ஒன்றினுள் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய நிலையில், அதனை பத்திரமாக மீட்கும் காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் என்றாலே மனிதர்கள் குலைநடுங்கும் நிலையில் தான் நிற்பார்கள். ஏனெனில் கடுமையான விஷத்தன்மை கொண்டுள்ளதுடன், நொடியில் உயிரையும் பறிக்கும்.
ஆனால் குறித்த பாம்புகளை சிலர் பிடித்து விளையாடவும், வேடிக்கை காட்டவும் செய்கின்றனர். இது சில தருணங்களில் பேராபத்தினை ஏற்படுத்திவிடும்.
இங்கு விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்று கண்ணாடி போத்தல் ஒன்றினுள் சிக்கிக் கொண்ட நிலையில், இதனை மீட்பு குழுவினர் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி பத்திரமாக மீட்டுள்ளனர்.
A common cobra inserted its head inside an abandoned milk bottle & swallowed a rat. Got stuck at the rim of the bottle due to swelling of the body.
— Susanta Nanda (@susantananda3) July 9, 2024
Snake Helpline volunteers using coconut oil, lubricated the deadly cobras & gently pulled it out to freedom.
My deep appreciation. pic.twitter.com/KZdF11puX0
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |