பாம்பே பாம்பை சாப்பிடுவதை பார்த்ததுண்டா? மெய்சிலிர்க்கும் காட்சி
பாம்பொன்று இன்னொரு பாம்பை முழுமையாக விழுங்கும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உலக அளவில் சுமார் 3,000 மேற்பட்ட வகையான பாம்புகள் இருக்கின்றன, ஆனால் இவற்றில் சில இனங்களை தங்களுடைய சொந்த இனத்தை சேர்ந்த பாம்புகளையே உணவாக உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கின்றன.
அவ்வாறு பாம்பே இன்னொரு பாம்பை உண்பதை பார்ப்பதற்கு அறுவறுப்பான தோற்றத்திலும் இதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன.
இதனை ஓபியோபாகி என்கிறார்கள் இது கிரேக்க மொழியில் பாம்பு உண்ணுதல் என அர்தப்படுகின்றது. தன் இனத்தையே சாப்பிடும் பழக்கம் எல்லா பாம்புகளிடமும் இருக்காது. மாறாக கிங் கோப்ரா உள்ளிட்ட சில பாம்பு இனங்களிடம் மட்டுமே இந்த பழக்கம் காணப்படுகின்றது.
உணவு பற்றாக்குறை, தங்களுடைய ஆதிக்கத்திற்கு கீழ் இருக்கும் இடத்தை தாங்களே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் மற்றும் மனச்சோர்வு காரணமாக இந்த பழக்கம் சில பாம்புகளிடம் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |