தன்னை கடித்த பாம்புக்கு பாடம் புகட்ட பலி வாங்கிய நபர்... மறுநாள் காலையில் குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி
பீகார் மாநிலத்தில் தன்னை படித்த பாம்பை திரும்ப கடித்த முதியவர் பரிதாபமாக பலியாகி சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம், மதோத் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வது முதியவர் ராம் மாட்டூ, இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மது போதையில் இருந்துள்ளார்.
தன் வீட்டின் அருகே இருந்த போது அங்கு ஒரு குட்டி பாம்பு ஒன்று வந்துள்ளது. அந்த பாம்பு அவரது காலை கடித்துவிட்டது. இதை கண்டு ஆத்திரமடைந்த ராம், மது போதையில் அதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என கருதி அதை தன் கையால் பிடித்து அதை கடித்துவிட்டார்.
அதுவும் ஒருமுறை அல்ல அவர் அந்த பாம்பை 10 முறை கடித்துவிட்டார். இதனால் அந்தபாம்பு உயிருக்கு போராடியது. அந்த பாம்பை அவர் அங்குள்ள மரத்தடியில் போட்டுவிட்டார்.
அதை பார்த்த அவரது வீட்டார் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல அழைத்துள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டு தான் தூங்க வேண்டும். என தூங்க சென்றுள்ளார்.
மேலும் அவர் அது குட்டி பாம்பு தான் அதற்கு விஷம் இருக்காது. ஒன்றும் ஆகாது என தூங்கியுள்ளார்.
அப்படி தூங்கியவர் நிரந்தரமாக தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் பார்த்த போது தான் அவர் இறுந்துவிட்டது தெரிந்துள்ளது.
பாம்பு கடித்தால் ஆத்திரத்தில் பாம்பை கடித்தவர் மரணமடைந்துள்ள செய்தி வைரலாக பரவி வருகிறது.