ஸ்மார்ட்போனில் சத்தம் குறைவாக இருக்கின்றதா? இதை செய்தாலே போதும்
செல்போனில் சத்தம் குறைவாக கேட்டால் என்ன செய்து சரிசெய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட்போன்
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொரு நபருக்கும் மிக முக்கியமானதாக இருக்கின்றது. அலுவலகம், வீடு என அன்றாடம் அதனை பாவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சில தருணங்களில் நாம் பயன்படுத்தும் ஆன்ட்ராய்டு போனில் சத்தம் குறைவாக கேட்கும் நிலையில், இதனை எவ்வாறு சரிசெய்யலாம் என்ற குழப்பம் நம்மில் அநேகருக்கு எழும்.
ஆனால் சில வழிமுறைகளை நீங்கள் செய்து வந்தால், நிச்சயம் இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம்.
சத்தத்தினை இரட்டிப்பாக்க என்ன செய்யலாம்?
ஆன்ட்ராய்டு போன் பாவிக்கும் பயனர்கள் தங்களது போனில் Settings என்ற ஆப்ஷனுக்கு சென்ற பின்பு, Sound & Vibration விருப்பத்திற்குச் செல்லவும்.
இதற்குள், பயனர்கள் Sound quality ஆப்ஷன்களை பெறுவார்கள். இதில் பயனர்கள் Dolby Atmos ஆப்ஷனை பெறும் நிலையில், இதனை ஆட்டோ மோட்டில் இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும்.
பின்னர் பயனர்கள் கீழே உள்ள Adapt Sound ஆப்ஷனை பார்த்து அதனை அணைத்து வைக்கவும். பின்பு பயனர்கள் அந்த விருப்பத்தை ‘over 60 years old’ என்று அமைத்தால், இயர்போன்களில் அதிக பாஸ் ஒலியை பெற முடியும்.
ஆனால் இந்த மாற்றங்களை செய்த பின்பும், ஒலி அளவில் சிக்கல் ஏற்பட்டால், தொலைபேசி ஸ்பீக்கரில் உள்ள அழுக்குகளை பிரஷ் மூலம் சுத்தம் செய்தால் பிரச்சினை சரியாகிவிடும்.
இவ்வாறு போனில் சத்தம் கேட்பது பிரச்சினையை சரிசெய்து கொள்ளலாம். ஆனால் சில போன்களில் இந்த முறைகள் சிறிது மாற்றம் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |