மொபைல் சார்ஜ் ஆக அதிக நேரம் ஆகுதா? இதோ சூப்பரான டிப்ஸ்
நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏற்றும் போது அதிக நேரம் எடுத்துக் கொள்வதை எவ்வாறு தடுப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட்போன்
இன்றைய காலத்தில் நமது வாழ்க்கைக்கு ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. இவை தொலைதொடர்பு சாதனம் மட்டுமல்ல பல அன்றாடப் பணிகளுக்கும் உதவுகின்றது.
இவ்வாறு பொழுதுபோக்கு முதல் கல்வி வரை அனைத்து இடங்களிலும் ஸ்மார்ட்போன் இன்றியமையாததாகியுள்ளதால், சில மணி நேரங்கள் கூட மொபைல் இல்லாமல் இருக்க முடியாத சூழலுக்குள் நாம் இருக்கின்றோம்.
நாம் அதிகமாக பாவிக்கும் போனில் பலரும் சந்திக்கும் பிரச்சனை தான் சார்ஜ் ஆவது. ஆம் சார்ஜ் ஆகும்போது அதிக நேரம் சில மொபைல்கள் எடுத்துக் கொள்கின்றது.
இவ்வாறு மெதுவாக சார்ஜ் ஆவதால் அதிக நேரம் எடுத்துக் கொள்வதை நாம் சில டிக்ஸ்களைக் கொண்டு தவிர்க்கலாம். இந்த சின்ன சின்ன டிப்ஸ்களால் உங்களது மொபைல் பேட்டரியின் பேக்அப் சிறப்பாகவே இருக்கும்.
நாம் செய்யும் தவறு என்ன?
ஸ்மார்ட்போன் மெதுவாக சார்ஜ் செய்தால் உங்களது சார்ஜிங் போர்டில் அழுக்கு படிந்துள்ளதா என்பதை சோதிப்பதுடன், உங்களது போனின் சார்ஜிங் போர்டை ஒருமுறை சுத்தம் செய்யவும். எனினும் இதனை செய்கையில் கவனமாக இருக்கவும்.
டூத் பிக்கின் உதவியுடன் உங்கள் போனின் சார்ஜிங் போர்ட்டை சுத்தம் செய்யலாம். டூத் பிக்ஸை பருத்தியினால் சுற்றி மெதுவாக சுத்தம் செய்யவும்.
மொபைலின் சார்ஜிங் போர்டை சில சொட்டு ஆல்கஹாலையும் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். ஆனால் இதனை செய்வதற்கு முன்பு நிச்சயமாக நிபுணர் ஆலோசனையை பெற வேண்டும். மேலும் ஸ்மார்ட்போனை ஆஃப் செய்வதை மறக்க வேண்டாம்.
உங்கள் ஸ்மார்ட்போனை ஆஃப் செய்து சார்ஜ் போட்டால் சீக்கிரம் சார்ஜ் ஆகும். இதனை நீங்களே கண்கூடாக உணரலாம்.
ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதற்கு முன்பு, அதில் நீங்கள் இயக்கிய அனைத்து அப்ளிகேஷன்களை முழுவதுமாக மூடவும். ஏனெனில் பின்புலத்தில் இயக்கும் செயலியால் சார்ஜ் குறைந்து கொண்டே இருக்கும்.
ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்ட சார்ஜரை பயன்படுத்தி தான் சார்ஜ் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு சார்ஜர்களை பயன்படுத்தினால் நன்றாக சார்ஜ் செய்யாது.
மொபைலில் அதிகமாக சார்ஜ் எடுத்துக்கொள்ளும் ஆப்ஸை ஆஃப் செய்து வைக்கவோ அல்லது முடக்கியோ வைக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |