ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி மாற்றம்! எந்த பிளான் தெரியுமா?
ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் தற்போது சற்று குறைத்துள்ளது பயனர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உட்பட பல நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை தாறுமாறாக சமீபத்தில் அதிகரித்துள்ளது.
இந்த கட்டணம் அதிகரிப்பின் காரணமாக பயனர்கள் பெரும்பாலும் பிஎஸ்என்எல்-க்கு மாறி வருகின்றனர்.
இந்நிலையில் பயனர்களுக்கு சற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ப்ரீபெய்ட் திட்டத்தில் எதிர்பாராத மாற்றத்தினை ஜியோ நிறுவனம் செய்துள்ளது.
அதாவது பயனர்களின் கோரிக்கைக்கு செவி கொடுத்த ஜியோவில் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று இருந்தது. இதன் திட்டத்தினை எதுவும் மாற்றாமல் வேலிடிட்டி காலத்தை மட்டும் 28 நாட்களுக்கு பதிலாக 30 நாட்கள் வரை நீட்டித்ததுடன், இதனை 5 ஜி-யாகவும் மாற்றியுள்ளது.
இதிலும் தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் மாதத்திற்கு 60 ஜிபி டேட்டாவை அளிக்கின்றது. முன்னதாக, ரூ. 349 திட்டத்தின் கட்டணம் ரூ. 299 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய விலை உயர்வினால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை போக்கவும், வணிக வளர்ச்சியை கருத்தில் கொண்டும், ஜியோ இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வணிக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |