ஸ்மார்ட் போன் அதிகமாக சூடாவது ஏன்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
இன்று பலரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்திவரும் நிலையில், அவை சூடாவதால் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. இதனை எவ்வாறு தவிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மொபைல் சூடாகாமல் பார்த்துக்கொள்வது எப்படி?
ஸ்மார்ட் போனை சூரிய ஒளி படும் இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
நீண்ட நேரம் பயன்படுத்தும் போது சூடாகும். ஆதலால் அதன் பின்பு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் அதிகமான அப்ளிகேசன்களை பயன்படுத்தாமல் தேவையானதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதிக செயல்பாடு கொண்ட ஆப்களை பயன்படுத்தும் போது பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் குறைவதுடன், மொபைலும் அதிக சூடாகிவிடும்.
அதிகமான சூடு இருப்பதாக தோன்றினால் அதன் கவரிலிருந்து கழற்றி தனியாக நிழல் உள்ள இடத்தில் சிறிது நேரம் வைக்கவும்.
பேட்டரி பயன்பாடு அதிகரித்தாலும் இவ்வாறு சூடாகும். இதனால் பேட்டரி சேவர் மோடை பயன்பாடு இல்லாத நேரங்களில் ஆன் செய்து கொள்ளவும்.
தரமில்லாத பேட்டரிகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.
ஸ்மார்ட்போனில் மால்வேர் போன்ற வைரஸ்கள் இருந்தாலும் சூடாக வாய்ப்புள்ளது. தேவையற்ற ஆப்களை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது.
மொபைல் போனில் வைஃபை, ஹாட்ஸ்பாட்டை அதிக நேரம் ஆன் செய்து வைத்திருந்தாலும் சூடாக வாய்ப்புள்ளது. இவ்வாறு சூடாவதால், குறித்த சேவைகள் வேலை செய்யாமல் சென்றுவிடும்.
மொபைல் போனில் பாதி அளவு சார்ஜ் இருக்கும் போது மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றினாலே, அல்லது நீண்ட நேரம் சார்ஜ் போடுவதாலும் இந்த பிரச்சினை ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |