உலகிலேயே மிகச் சிறிய கமரா! என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?
தொழில்நுட்ப சாதனங்கள் நவீனமயமாவதற்கு முன்னர் விலை உயர்ந்ததாகவும், கையில் சுமந்து செல்வதற்கே கடினமாக இருக்கும்.
ஆனால் தற்போது எல்லாம் மாறி விட்டது, மாறாக மனிதர்களின் தேவைகளுக்கேற்ப புதிய புதிய சாதனங்கள் அதிகரித்து வருகின்றது.
பயனர்கள் எவ்வளவு சிறியதாக கேட்டாலும் அந்தளவிற்கு சாதனங்கள் தயாரித்து தர நிறுவனங்கள் தயாராகவுள்ளது.
அந்த வகையில் உலகிலேயே மிகச்சிறிய கமரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கமரா மருத்துவர்களின் பாவணைக்காக தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். அத்துடன் இந்த கேமரா . 0.575×0.575 அளவில் தான் இருக்குமாம்.
அதாவது இந்த கமரா கிட்டத்தட்ட ஒரு சிறிய மண் அளவுக்கு உள்ளது.
இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய இந்த கமராவில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
மைக்ரோ கேமராவிலுள்ள வசதிகள்
1. குறித்த மைக்ரோ கேமரா ‘OV6948’ என அழைக்கப்படுகின்றது. இது அமெரிக்காவைச் சேர்ந்த OmniVision என்ற டெக்னாலஜி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
2. உலகில் இது தான் மிகச் சிறிய கேமரா என்பதால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
3. மைக்ரோ கேமரா ‘OV6948’ கமராவின் பராமரிப்பு செலவு மிகக் குறைவு என கூறப்படுகின்றது.
4. அதிக செலவில்லாத சிறிய டயாமீட்டர் கொண்ட எண்டோஸ்கோப் கருவிகள் சிறந்த இமேஜ் குவாலிட்டியுடன் கேமரா உருவாக்கப்பட்டுள்ளது.
5. அதிக சூடாகாமல் இருக்கும் என Chip on Tip கேமரா என இதை உற்பத்தி செய்த டெவலப்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.
6. கேமராவுக்கு அதிக உணரும் திறன் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |