Viral Video: அம்மாவுடன் தண்ணீருக்குள் இறங்கிய குட்டியானை... பின்பு செய்த காரியத்தைப் பாருங்க
குட்டி யானை ஒன்று தனது தாயின் அரவணைப்பில் வந்து தண்ணீர் அருந்திவிட்டு, அதே தண்ணீரில் ஆட்டம் போடும் காட்சி வைரலாகி வருகின்றது.
தாயுடன் குட்டி யானை செய்த அட்டகாசம்
விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உருவத்தில் மட்டுமே மிகப்பெரியதாக இருக்கும் யானை, குணத்தில் குழந்தை என்று தான் கூற வேண்டும். சில தருணங்களில் பாகன் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து நடப்பதை நாம் அவதானித்திருப்போம்.
ஆனால் சில தருணங்களில் ஆக்ரோஷமாக தாக்கவும் செய்கின்றது. அது ஏனெனில் தனது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பத்தில் தான் மனிதரை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்கின்றது.
வனப்பகுதி ஒன்றில் சிறிய குட்டி யானை ஒன்று தனது தாயுடன் தண்ணீர் அருந்த வந்துள்ளது. தண்ணீர் அருந்திய பின்பு மீண்டும் தண்ணீருக்குள் செய்யும் அட்டகாசம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.
சமீப காலமாக வனப்பகுதிகளை அதிகமாக மனிதர்கள் அழித்துவரும் நிலையில், இம்மாதிரியான விலங்குகள் தங்களது மகிழ்ச்சியைத் தொலைத்து பெரிதும் அவதிப்படுவதுடன், மனிதர்களுக்கும் பயத்தை ஏற்படுத்துகின்றது.
Step by step- trunk to trunk, the Cute baby discovers the magic of water under Mamas watch….
— Susanta Nanda IFS (Retd) (@susantananda3) August 12, 2025
Every drop of water is a drop of hope.Let’s make sure this moment never disappears. RT for a future where elephants roam free.#world elephant day. pic.twitter.com/3GUsvabCN0
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |