Viral Video: இந்த சின்ன வயசுல எம்புட்டு தைரியம்னு பாருங்க... குரங்கை தலைதெறிக்க ஓட வைத்த சிறுவன்
சிறுவன் குரங்கிடம் வம்பிழுந்த நிலையில், குரங்கு சிறுவனை எதிர்த்து தாக்க முற்பட்டு கடைசியில் தலைதெறிக்க ஓடிய காட்சி வைரலாகி வருகின்றது.
தலைதெறிக்க ஓடிய குரங்கு
பொதுவாக குழந்தைகள் என்றால் அதன் சேட்டைகளுக்கு பஞ்சமே இருக்காது. வீட்டில் உள்ள அனைவரது கவலைகளை மறக்க வைத்து சிரிக்க வைப்பார்கள்.
அந்த அளவிற்கு குறும்புத்தனத்துடன் இருக்கும் இவர்கள் வெளியிடங்களுக்கு சென்றும், தனது குறும்புத்தனத்தினை விடாமல் செய்து வருகின்றனர்.

இங்கு சாலை ஒன்றில் நின்றுகொண்டிருந்த குரங்கிடம் சிறுவன் வம்பிழுத்துள்ளார். பதிலுக்கு குரங்கு சிறுவனை கடிக்க வந்துள்ளது.
உடனே பொங்கி எழுந்த சிறுவன் குரங்கினை விடாமல் துரத்தி சென்று, இறுதியில் அதனை தலைதெறிக்க ஓடவே வைத்துள்ளான். குறித்த காட்சி பார்வையாளர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |